Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

காசு பணம் வந்தால் காக்கா கூட கலராகிறும்

 காசு பணம் இருந்தால் காக்கா கூட கலராகிரும்டா என்று பருத்தி வீரன் படத்தில் அமீர் ஒரு வசனம் வைத்திருப்பார். ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் எதார்த்தமும் கூட 

பணம் அழகு இதனை எப்படி ஒப்பிடுவது அல்லது வேறு படுத்திப் பார்ப்பது என்று அல்லாமல் நிதர்சனம் என்ன என்பதனை புரிந்து கொள்ள முயல்வோம்.

பணம் என்ன செய்ய முடியும் ? என்ற கேள்விக்கு என்ன செய்ய முடியாது என்று தான் கேட்க தோன்றும். ஆனால் பணம் என்ன செய்கிறது என்ற பகுப்பாய்வுக்குள் சென்றால், பணம் தேவையை பூர்த்தி செய்கிறது மற்றும் ஆசையை நிறைவேற்றுகிறது.

தேவை பூர்த்தியாகும் பட்சத்தில் மனதில் ஒரு நிம்மதி குடி கொள்கிறது. ஆசை நிறைவேறும் போது மனதில் ஏகாந்தம் குடிக் கொள்கிறது. இந்த மனம் நிம்மதியாய் இருந்தால் ஆரோக்கியம் அது தானாக வருகிறது. 

ஆரோக்கியம் வரும் போது முகம் பொலிவாகிறது உடல் மினு மினுக்கிறது. அகத்தின் அழகை முகத்தில் காட்டுகிறது. பணம் வந்ததால் இது அனைத்தும் வந்தது என்ற மாயையில் நாம் மூழ்வியும் விடுவோம்.



ஆனால் இவை அனைத்தும் மன நிம்மதியால் வந்தது. இந்த நிம்மது தேவையை பூர்த்தி செய்து வரவேண்டிய கட்டாயம் இல்லை. தேவைகளை குறைத்துக் கொண்டு இருப்பதை திருப்தியாக ஏற்றுக் கொண்டு தேவையற்ற கவலைகளை விட்டால் இந்த நிம்மதி தானாகா வந்து விடும். 

சினிமா நடிகைகளும் அவர்கள் அழகும்;

முன்பெல்லாம் அழகு குறிப்புகள் இயற்கை மூலிகைகள் மூலம் அல்லது யோகா தொடர்ச்சியாக செய்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி உடல் அழகு பெரும் என்று பல உண்மையான விளம்பரங்கள் இருந்தன கடந்த நூற்றாண்டு அழகு என்பது நிறம் என்று திணிக்கப் பட்டது.

வெள்ளையாக இருப்பவர்கள் தான் அழகு என்று பல ரசாயன வேதியல் பொருட்களை இளம் பெண்களிடம் கொண்டு சேர்த்து இன்று பலர் கேன்சர் வரும் நிலையிலும் பலர் கேன்சராலும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சினிமா நடிகைகள் முகத்தை அழகு செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள் மற்றும் மார்பங்களையும் தான் இங்கு நிம்மதி யோ மனமோ தேவையில்லை தான் முழுக்க முழுக்க பணம் இருந்தால் போதும் தங்களை அழகாக்கிக் கொள்ளலாம். 

நாம் கண்முன் தற்போது பார்த்து வரும் பல நடிகைகள் தங்கள் மூக்கு தாடை, உதடு என தனித் தனி பாகங்களாக சார்ஜரி செய்து மாற்றி வைத்துள்ளனர். அவர்களுடைய பழைய புகைப்படங்களை பார்த்தால் அத்தனை வேறுபாடு உள்ளது.

தனிமனித வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ஏன் பெண்களை அழகு சாதனப் பொருட்கள் மூலம் அழகுப் படுத்த விளம்பரம் செய்கிறார்கள் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொண்டாலும் தங்களால் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.

அழகு பிறப்பில் இறைவன் கொடுத்தது அதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மனம் இருந்தால் போதும் வாழும் சில நாட்கள் நிம்மதியாக நல்ல உணவுகளை உண்டு ஆனந்தமாக இருங்கள். 

எத்தனை நம்மை அழகுப் படுத்திக் கொண்டாலும் கலையும் மேகங்கள் போலவே அவை. அதனால் இயல்பான வாழ்வை ஆனந்தமாய் வாழ்வோம்.

பெண்களுக்கு மஞ்சள், கடலை மாவு, கனகாமரம் பூ இவைகள் போதும் அவர்களை அழகுப் படுத்த அதனை மிஞ்சி ஏன் உங்களையே நீங்கள் இழந்து கொள்கிறீர்கள். 

பெண்ணே பெரும் போதை தான் ஆணுக்கு நீங்கள் மெனக்கெட்டு உங்களை தனியாக அழகு படுத்த வேண்டிய அவசியம் புரியவில்லை.

வாழுங்கள் வளமுடன்….







Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...